

செம்பட்டி:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேனியில் அரசு விழாவில் கலந்து கொண்டு பின்னர் நேற்று மாலை திண்டுக்கல்லுக்கு சாலை மார்க்கமாக சென்றார். வழிநெடுகிலும் ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். நிலக்கோட்டை அருகே குல்லலக்குண்டு ஊராட்சி கல்லடிப்பட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது60). கூலித்தொழிலாளியான இவர் தீவிர தி.மு.க. தொண்டர்.
இவருக்கு ஆரோக்கிய மேரி என்ற மனைவியும், அருள்ராஜ், ஸ்டாலின் என்ற மகன்களும் ஞானசவுந்தரி என்ற மகளும் உள்ளனர். செம்பட்டியில் முதல்-அமைச்சரை வரவேற்க ஆரோக்கியசாமி சென்றார்.
வரவேற்பு நிகழ்ச்சி முடிந்தபின்னர் தொண்டர்கள் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சிக்கிய ஆரோக்கியசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.
அவரை பார்த்து அவரது மனைவி கதறி அழுதார். நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் சவுந்தரபாண்டியன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் ஆரோக்கியசாமியின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினர்.