ஊத்துக்கோட்டையில் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் ஊத்துக்கோட்டையில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை திடீரென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மக்களோடு கலந்துரையாடி கோரிக்கைகளை கலெக்டர் கேட்டு அறிந்தார்.
ஊத்துக்கோட்டையில் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
Published on

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டையில் புதிதாக தார் சாலைகள் மழை நீர் கால்வாய், கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் மழை நீர் பாயாத நிலையில் உள்ள தாழ்வான பகுதிகளில் சாலை அமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் ஊத்துக்கோட்டையில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை திடீரென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அப்பகுதியில் மக்களோடு கலந்துரையாடி கோரிக்கைகளை கேட்டு அறிந்தார். பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் லதா, உதவி செயற்பொறியாளர் சரவணன், ஊத்துக்கோட்டை பேரூராட்சித் தலைவர் அப்துல் ரஷீத், துணைத் தலைவர் குமரவேல், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் அபிராமி, பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ், இளநிலை பொறியாளர் சிவக்குமார், வார்டு கவுன்சிலர்கள் கோல்ட் மனி, பார்த்திபன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com