நாட்டு வெடிகுண்டு தயார் செய்த 4 வாலிபர்கள் கைது

மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது அதில் 2 நாட்டு வெடிகுண்டுகள் இருப்பது தெரியவந்தது.4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
நாட்டு வெடிகுண்டு தயார் செய்த 4 வாலிபர்கள் கைது
Published on

தென்காசி:

தென்காசி மாவட்டம் சுரண்டையை அடுத்த வீ.கே.புதூர் அருகே உள்ள வீராணம் சாலையில்

வீ.கே.புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவுசல்யா தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அந்த நபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். உடனே அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்த போது அவர் நபர் வீராணம் மேட்டுப்பட்டி தெருவை சேர்ந்த சுரேஷ்(வயது 34) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை பிடித்து அவரது மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது அதில் 2 நாட்டு வெடிகுண்டுகள் இருப்பது தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக விசாரணை செய்ததில் சுரண்டை அம்மன்கோவில் தெருவை சேர்ந்த நாக ராஜா(35) என்பவரிடமிருந்து வெடி மருந்துகள் வாங்கி 8 நாட்டு வெடிகுண்டுகள் தயார் செய்ததாக அவர் தெரிவித்தார்.

மேலும், அதில் 2 குண்டுகளை சுரண்டையை சேர்ந்த மனோ சங்கர் என்பவரிடமும், ஒரு குண்டை அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரிடமும் கொடுத்து வைத்திருப்பதாகவும், 3 குண்டுகளை கடந்த 30-ந்தேதி வீராணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்திற்குள் சுரேஷ் மற்றும் கார்த்திக் சேர்ந்து வெடித்து பள்ளி சுவற்றை சேதம் செய்ததாகவும் கூறினார்.

இதையடுத்து சுரேஷ், நாகராஜா, கார்த்திக், மனோ சங்கர் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com