திண்டுக்கல்லில் தாய்ப்பால் குடித்த குழந்தை திடீர் சாவு

தாய்ப்பால் குடித்துக் கொண்டு இருந்த குழந்தை க்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் மேட்டு ப்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் அந்தோணிராஜ். கூலித்தொழிலாளி. இவரது மனைவி மரியபெர்லின் பிரின்சியா (வயது26). இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் பிரின்சியா கர்ப்பம் அடைந்தார்.

கடந்த 43 நாட்களுக்கு முன்பு இவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. பிறந்த அன்றே ஒரு குழந்தை உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்தது.

இந்நிலையில் இன்று காலை குழந்தைக்கு பிரின்சியா தாய்ப்பால் கொடுத்தார். குடித்துக் கொண்டு இருந்த குழந்தை க்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தையை கொண்டு வந்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில் அவை அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com