தடகளப் போட்டியில் ஸ்ரீ கலைவாணி பள்ளி சாம்பியன்

சங்கரன்கோவில் குறு வட்டார அளவிலான தடகளப் போட்டிகள் அரசு மேல்நிலைப்பள்ளி கரிவலம் வந்தநல்லூரில் 2 நாட்கள் நடைபெற்றது.பெண்கள் பிரிவில் 21 தங்கம், 17 வெள்ளி, 10 வெண்கலம் பெற்று ஸ்ரீ கலைவாணி பள்ளி பெண்கள் பிரிவு முதலிடம் பெற்றனர்.
தடகளப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற கலைவாணி பள்ளி மாணவிகளை படத்தில் காணலாம்.
தடகளப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற கலைவாணி பள்ளி மாணவிகளை படத்தில் காணலாம்.
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் குறு வட்டார அளவிலான தடகளப் போட்டிகள் அரசு மேல்நிலைப்பள்ளி கரிவலம் வந்தநல்லூரில் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் 38 பள்ளி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிரிவிலும், மாணவிகள் பிரிவிலும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

இதில் மாணவர்கள் பிரிவில் 28 தங்கம், 16 வெள்ளி, 8 வெண்கலம் பெற்று முதலிடம் பெற்றனர். அதேபோன்று பெண்கள் பிரிவில் 21 தங்கம், 17 வெள்ளி, 10 வெண்கலம் பெற்று ஸ்ரீ கலைவாணி பள்ளி பெண்கள் பிரிவிலும் முதலிடம் பெற்றனர். இளையோர் பிரிவில் சந்தோஷ், மூத்தோர் பிரிவில் பவேஷ், மிக மூத்தோர் பிரிவில் பிரகாஷ் தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்றனர்.

பெண்கள் மூத்தோர் பிரிவில் கனிமொழி, தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். வட்டார அளவில் முதலிடம், 2-ம் இடம் பெற்ற மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தவர்களை பள்ளி தாளாளர் கண்ணன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com