மூதாட்டியிடம் 3 பவுன் தங்க சங்கிலி பறிப்பு

சேலம் சின்னதிருப்பதி மீனாட்சி அம்மன் நகர் பகுதியை சேர்ந்த மூதாட்டியிடம் 3 பவுன் தங்க சங்கிலி பறிப்பு.
.
.
Published on

சேலம்:

சேலம் சின்னதிருப்பதி மீனாட்சி அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் அங்கப்பன்.  இவரது மனைவி சுசீலா (வயது 70). 

இவர் நேற்று காலை செவ்வாய்பேட்டையில் உள்ள ஒரு வங்கியில் முதியோர் உதவித்தொகை எடுக்க வந்தபோது அவரிடம் 50 வயது மதிக்கத்தக்க மாற்றுத்திறனாளி நபர், முதியோர்களுக்கு     சேலம் அரசு மருத்துவமனையிலும், உதவித்தொகை வழங்குவதாக கூறி ஆட்டோவில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிறப்பு- இறப்பு பதிவேடு அலுவலகம் அருகே அழைத்துச் சென்ற அந்த நபர், சுசிலாவின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க  செயினை கழட்டி  வைத்துக் கொள்ளும்படி கூறினார். சுசீலா தங்கச் செயினை கழற்றி அந்த நபரிடம் கொடுத்தார். 

இதையடுத்து அந்த நபர் அங்கிருந்து நைசாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சேலம் அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.  

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com