சேலம் கஞ்சமலை கன்னிமார் ஓடை அருகில் பிணமாக கிடந்தவர் யார்?

கன்னிமார் ஓடை அருகில் வாலிபர் ஒருவர் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.
சேலம் கஞ்சமலை கன்னிமார் ஓடை அருகில் பிணமாக கிடந்தவர் யார்?
Published on

சேலம்:

சேலம் கஞ்சமலை கன்னிமார் ஓடை அருகில் வாலிபர் ஒருவர் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். கடந்த 20-ந்தேதி இதை பார்த்த பொதுமக்கள், சேலம் இரும்பாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, வாலி பர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார்? என தெரியவில்லை. இது குறித்து இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

அவர் பெயர் மற்றும் முகவரி தெரியாததால் போலீசாருக்கு மேற்கொண்டு விசாரணை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த வாலிபர் புளூ நிற பேண்ட், புளூ, ரோஸ்கலர் முழுக்கை சட்டை அணிந்திருந்தார். இவரை பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தால் பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கும்படி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com