சேலம் கலெக்டர் அலுவலகத்தில்மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி

சிவகுமார் (47), மாற்றுத்திறனாளி. இவர் இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது அவர் திடீரென கையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றினார். இதை பார்த்த பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
சேலம் கலெக்டர் அலுவலகத்தில்மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி
Published on

சேலம்:

சேலம் மணியனூர் திருவேங்கட நகரை சேர்ந்தவர் சிவகுமார் (47), மாற்றுத்திறனாளி. இவர் இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது அவர் திடீரென கையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றினார். இதை பார்த்த பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் கூறுகையில், கடந்த 26-ந் தேதி எனது வீட்டிற்குள் புகுந்து 3 பேர் என்னை தாக்கினார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கொண்டலாம்பட்டி போலீசில் புகார் அளித்தேன். ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com