ஒரு மாத குழந்தை திடீர் சாவு

நள்ளிரவு திடீரென தர்னேஷ்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
ஒரு மாத குழந்தை திடீர் சாவு
Published on: 

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், இண்டூர் அடுத்துளள கொல்லஅள்ளி பகுதியை சேர்ந்தவர் முத்தழகன். இவருக்கு தர்னேஷ் என்கிற ஒரு மாத ஆண் குழந்தை உள்ளன.

இந்த நிலையில் நள்ளிரவு திடீரென தர்னேஷ்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் பதறி போன பெற்றோர்கள் அந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் தர்னேஷ் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

இது குறித்து இண்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com