

குமாரபாளையம்,
குமாரபாளையம் சிவசக்தி நகரில் வசிப்பவர் அன்பு (வயது33) நேற்று அப்பகுதியில் உள்ள சில வீடுகளின் கதவுகளை காலால் எட்டி உடைத்தும், தகாத வார்த்தைகாளால் பேசியும் தகராறு செய்துள்ளார்.
இவர் மீது குமார பாளையம் போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் 2020ம் ஆண்டில் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்த வழக்கு உள்ளது.
இது குறித்து குமார பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் நேரில் சென்று அவரை பிடித்து விசாரித்ததில், பிரபல ரவுடி என்பதும், கொலை செய்ய சத்திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இந்த அந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.