குமாரபாளையத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான நூல்கள் அழிப்பு

குமாரபாளையத்தில் விதிகளை மீறி இயங்கிய சாயப்பட்டறைகளில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான நூல்கள் அழிக்கப்பட்டன.
.
.
Published on

குமாரபாளையம்:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சாக்கடையில் வெளியேற்றப்பட்ட சாயக்கழிவுகள் குடிநீர் குழாயில் கலந்ததால் தண்ணீர் நிறம் மாறியதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாசுகட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது 5 சாயப்பட்டறைகள் விதிகளை மீறி இயங்கியதோடு சாயக்கழிவு நீரை நேரடியாக சாக்கடையில் வெளியேற்றியதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான நூல்கள் அமிலம் ஊற்றி அழிக்கப்பட்டன.

மேலும் சாயக்கழிவுநீரை சுத்திகரிக்காமல் சாக்கடை வழியாக திறந்து விடுகிற சாயப்பட்டறை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com