மாநகர பஸ் பாஸ் விற்பனை மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பு

மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் செயல்பட்டு வரும் பயணச்சீட்டு விற்பனை மையங்களில் 23.04.2022 மற்றும் 24.04.2022 ஆகிய இரு நாட்கள் மட்டும் நீட்டித்து மாதாந்திர பஸ்பாஸ் வழங்கப்படும்.
மாநகர பேருந்துகள்
மாநகர பேருந்துகள்
Published on

சென்னை:

மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:

மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் செயல்பட்டு வரும் மாதாந்திர பஸ்பாஸ் அட்டை விற்பனை மையங்களில், ஒவ்வொரு மாதமும், 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை விருப்பம்போல் பயணம் செய்யக்கூடிய ரூ.1,000/- மதிப்பிலான மாதாந்திர பஸ்பாஸ் மற்றும் மாதாந்திர சலுகை பஸ்பாஸ்கள் விற்பனை செய்யப்படுகிறது.

எனினும், கடந்த 14.04.2022 முதல் 17.04.2022 வரை தொடர் விடுமுறை காரணமாக, பயணிகள் நலன் கருதி மாதாந்திர பஸ்பாஸ் பயணச் சீட்டுகளை 23.04.2022 மற்றும் 24.04.2022 ஆகிய இரு நாட்களுக்கு நீட்டித்து, அனைத்து மாநகர் போக்குவரத்துக் கழக மாதாந்திர பயணச் சீட்டு விற்பனை மையங்களிலும் வழங்கப்படும்.

பயணிகள் ரூ.1,000/- மதிப்பிலான பயண அட்டை மற்றும் மாதாந்திர சலுகை பஸ்பாஸ் வழக்கம்போல் நீடிக்கப்பட்ட 23.04.2022 மற்றும் 24.04.2022 தேதிகளில் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com