தேனி அருகே குளியலறையில் தவறி விழுந்து வாலிபர் பலி

தேனி அருகே குளியலறையில் தவறி விழுந்த வாலிபர் பலியானார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

தேனி:

தேனி அருகே சவலப்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல் மகன் கன்னிச்சாமி (வயது 25). இவர் தேனி பழைய பஸ்நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் சமையலராக வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று பணி முடிந்து வீட்டிற்கு சென்றார். குளியலறையில் முகம் கழுவ சென்றபோது தவறி விழுந்து தலையில் படுகாயம் ஏற்பட்டது. மயங்கி கிடந்த அவரை பெற்றோர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்து விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com