ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

தேஜாஸ், முத்துநகர் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.
ரெயில்
ரெயில்
Published on

மதுரை

தமிழ் புத்தாண்டு விடுமுறை காரணமாக ரெயில்களில் கூட்டம் அலை மோதுகிறது. பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு சென்னை மதுரை தேஜாஸ் ரெயிலில் இன்று (17-ந்தேதி) இரு மார்க்கங்களிலும் தலா 2 முதல் வகுப்பு குளிர்சாதன இருக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்படும். 

இதேபோல தூத்துக்குடி சென்னை முத்துநகர் ரெயிலில் இன்றும், சென்னை&கன்னியாகுமரி ரெயிலில் நாளையும், கன்னியாகுமரி சென்னை ரெயிலில் 19-ந்தேதியும், சென்னை தூத்துக்குடி முத்துநகர் ரெயிலில் 20-ந் தேதியும் கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படும்.

மேற்கண்ட தகவலை மதுரை ரெயில்வே கோட்ட செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com