கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு பிரதமர் மோடி கடிதம்

சோழவந்தான் அருகே கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதினார்.ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பிரதமர் மோடியின் வாழ்த்து கடிதம் பெற்ற மாணவர்களை படத்தில் காணலாம்.
பிரதமர் மோடியின் வாழ்த்து கடிதம் பெற்ற மாணவர்களை படத்தில் காணலாம்.
Published on

சோழவந்தான்

சோழவந்தான் ராயபுரம் கல்வி இன்டர்நேஷனல் பப் ளிக் பள்ளி மாணவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கடிதங்கள் அனுப்பி உள் ளார்.

இரு பக்கங்களை கொண்ட கடிதத்தில் "பரிக்சா பே சர்ச்சா" எனும் ஐந்து உயிர் மூச்சான கொள்கைகள் உன்னதமான இந்தி யாவிற்காக எனும் முகப்பு தலைப்பிட்டு வளர்ச்சி அடைந்த பாரத்தின் இலக்கு, அடிமை சிந்தனையை அறவே நீக்குதல், நம் பாரம் பரியத்தை கொண்டாடுதல், ஒற்றுமையை உறுதி செய்தல், கடமைகளில் கவனம் செலுத்துதல் தலைப்புகளை குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரிடம் கடிதம் பெற்ற மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் அபிராமி, டயானா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com