மதுரையில் ஓரே நாளில் ரூ.1.86 லட்சம் அபராதம் வசூல்

கொரோனா விதிமுறைகளை மீறியதாக மதுரையில் ஒரே நாளில் 1,612 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 1.86 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
அபராதம் வசூலிக்கப்பட்டது
அபராதம் வசூலிக்கப்பட்டது
Published on: 

மதுரை

மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து மாவட்டம் முழுவதும் கட்டுபாடுகள் அமலுக்கு வந்துள்ளன.

மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்றப்படுகிறதா ? என்பதை கண்காணிக்கும் வகையில் மாநகராட்சி 12 தனித்தனி குழுக்களை ஏற்படுத்தி உள்ளன.

அவர்கள் மாநகரம் முழுவதிலும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது அரசின் கொரோனா விதிகளை அமல்படுத்தாத தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 47 திருமண மண்டபங்களுக்கு 11,600 ரூபாயும், 386 டீ, காபி மற்றும் ஓட்டல்களுக்கு 46,400 ரூபாயும், முக கவசம் அணியாத 373 நபருக்கு 32,700 ரூபாயும், 806 கடைகளுக்கு 90,700 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல மதுரையில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக 1,612 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து ஒரே நாளில் ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com