ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா

ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா நடந்தது. பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் சார்பாக ஆன்மிக நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா
Published on

சோழவந்தான்

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவில் பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் சார்பாக ஆன்மிக நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமத்தின் ஸ்ரீமத் பரமானந்தா சுவாமிகள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் விஷ்ணு பிரசாத் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கோவில் செயல் அலுவலர் இளமதி முன்னிலை வகித்தார். முன்னாள் தலைமை ஆசிரியை ஜெயஸ்ரீ வரவேற்றார். பிரம்மா குமாரிகள் கிளை நிலையத்தின் சார்பாக போதைப்பொருள் விழிப்புணர்வு நாடகமும் சிறுவர், சிறுமியரின் கலை நிகழ்ச்சியும் நடந்தது. முடிவில் முன்னாள் சுகாதார ஆய்வாளர் பழனியப்பன் நன்றி கூறினார். முன்னாள் சேர்மன் முருகேசன் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com