கார் மோதி வாலிபர் பலி

கார் மோதி வாலிபர் பலியானார்.நான்கு வழிச்சாலையை கடந்து எதிரே உள்ள கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் நான்கு வழிச் சாலையை கடக்க முயன்றார்.
கார் மோதி வாலிபர் பலி
Published on

திருமங்கலம், ஜூன். 11-

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மகன் அருள் ஈஸ்வரன்(வயது27). கூலி தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில் சமத்துவபுரத்தில் இருந்து நான்கு வழிச்சாலையை கடந்து எதிரே உள்ள கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் நான்கு வழிச் சாலையை கடக்க முயன்றார். அப்போது மதுரையிலிருந்து விருதுநகர் நோக்கிச்சென்ற கார், அருள் ஈஸ்வரன் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த அவரை திருமங்கலம் தாலுகா போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதனைத்தொடர்ந்து அவரது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து கார் டிரைவரான விருதுநகர் பர்மா காலனியை சேர்ந்த ஷேக் இர்பான்(26) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com