4 வழிச்சாலை பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் முற்றுகை போராட்டம்

மதுரை மாவட்டம் மேலூ ரில் இருந்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வரை தற்போது 4 வழி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
4 வழிச்சாலை பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
4 வழிச்சாலை பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
Published on

மதுரை

மதுரை மாவட்டம் மேலூ ரில் இருந்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வரை தற்போது 4 வழி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

மேலூர் அருகே உள்ள நாவினிப்பட்டி ஊராட்சியை சேர்ந்த நாவினிப்பட்டி, வடக்கு நாவினிப்பட்டி, பெருமாள்பட்டி கூத்தப்ப ன்பட்டி, கோவில்பட்டி ஆகிய 5 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் 300-க்கும் மேற்பட்டோர் இன்று காலை மேலூர் அருகே உள்ள கூத்தப்பன்பட்டி நான்கு வழி சாலை அமைக்கும் இடத்தில் திரண்டனர்.

அவர்கள் நீர்நிலைகளை அழிக்காத வண்ணமும் பொதுமக்கள் சாலையை கடந்து செல்ல உரிய பாலம் மற்றும் பாதைகள் அமைக்கவும், நீர்நிலைகள் தண்ணீர் கடந்து செல்ல தேவையான பைப்புகள் அமைக்க கோரி திடீர் மறியலில் ஈடுபட்டனர். மேலும்  நான்கு சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களை தடுத்து நிறுத்தினர். 

இதுகுறித்து  தகவலறிந்த மேலூர் காவல் துறை அளித்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சோலை முத்து தலைமையில் போலீ சாரும், நில எடுப்பு தனிப்பி ரிவு தாசில்தார் செந்தாமரை, கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன், நாவினிபட்டி ஊராட்சி செயலர் இளையராஜா மற்றும் வருவாய்துறையினர் சம்பந்தப்பட்ட பொது மக்களிடம் தொடர்ந்து பேச்சு பேச்சுவார்த்தை நடத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com