தூத்துக்குடி யூனியன் அலுவலகத்தில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் தொழுநோய் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமில்லா மேற்பார்வையாளர் மதிவாணன் தொழுநோய் விழிப்புணர்வு குறித்து விளக்கி பேசினார்.
தூத்துக்குடி யூனியன் அலுவலகத்தில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் தொழுநோய் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. யூனியன் சேர்மன் வசுமதி அம்பாசங்கர் தலைமை தாங்கினார். யூனியன் கமிஷனர் ஹெலன் பொன்மணி, வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர், புதுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமில்லா மேற்பார்வையாளர் மதிவாணன் தொழுநோய் விழிப்புணர்வு குறித்து விளக்கி பேசினார்.

கூட்டத்தில் குமாரகிரி ஊராட்சிமன்ற தலைவர் ஜாக்சன் துரைமணி உள்ளிட்ட தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய கிராம பஞ்சாயத்து தலைவர்கள், மாப்பிள்ளையூரணி ஊராட்சி செயலர் ஜெயக்குமார், அய்யனடைப்பு ஊராட்சி செயலர் சங்கரராம சுப்பிரமணியன் உட்பட ஊராட்சி செயலர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழுவினர், அலுவலர்கள் கலந்து கொண்டனர், முடிவைத்தானேந்தல் ஊராட்சி தலைவர் ரம்யா நன்றி கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com