திண்டுக்கல் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை

குடும்ப பிரச்சினையால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கணவர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே குஜிலியம்பாறை மணியகாரன்பட்டியை சேர்ந்த சந்தனத்துரை மனைவி பாக்கியலட்சுமி(40). கணவர் கூலிவேலைக்கு சென்று அதில் சம்பாதித்த பணத்தை வீட்டுக்கு கொடுக்காமல் இருந்து வந்தார்.

மேலும் கணவரின் குடும்பத்தினர் பாக்கியலட்சுமியையும் அவரது மகளையும் கொடுமைப்படுத்தி வந்தனர்.

தொடர்ந்து சித்ரவதை செய்ததால் மனம்வெறுத்த பாக்கியலட்சுமி வீட்டிலேயே உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி பாக்கியலட்சுமி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சத்யபிரபா உத்தரவுப்படி சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் சந்தனத்துரை உள்பட 7 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com