வீரவநல்லூர் அருகே கூலித்தொழிலாளி பாம்பு கடித்து சாவு

காளியப்பன் ரெட்டியாபுரம் விலக்கில் உள்ள பஸ் நிறுத்தத்தில் படுத்திருந்தார்.மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு காளியப்பன் அனுப்பி வைக்கப்பட்டார்.
வீரவநல்லூர் அருகே கூலித்தொழிலாளி பாம்பு கடித்து சாவு
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டம் தெற்கு வீரவநல்லூர் பெரியார் நகரை சேர்ந்தவர் காளியப்பன் (வயது58). கூலித் தொழிலாளியான இவர் அப்பகுதியில் உள்ள ரெட்டியாபுரம் விலக்கில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நேற்று மாலை படுத்திருந்தார். அப்போது அவரை பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதனால் வாயில் நுரை தள்ளியவாறு காளியப்பன் மயங்கி கிடந்தார்.

இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அவரை மீட்டு சிகிச்சைக்காக சேரன் மகா தேவி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார். அங்கு சிகிச்சை பல னின்றி இன்று அதிகாலை காளியப்பன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com