கல்லுாரி மாணவன் மீது 'போக்சோ' வழக்கு

கல்லுாரி மாணவன் மீது 'போக்சோ' வழக்கு பதிவு செய்யப்பட்டது.ஒன்றரை ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
கல்லுாரி மாணவன் மீது 'போக்சோ' வழக்கு
Published on

கரூர்:

கரூர் மாவட்டம், வெள்ளியணை, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் மகன் கிரிதரன் (வயது 19). கரூரில் உள்ள தனியார் கல்லுாரியில் இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவர், அதே பகுதியை சேர்ந்த, அரசு கல்லுாரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவிக்கு, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து, மாணவியின் தாய், கரூர் மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், கிரிதரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ், 'போலீசார் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com