ஆரல்வாய்மொழி அருகே வாகனம் மோதியதில் டாஸ்மாக் விற்பனையாளர் பரிதாப சாவு

அந்த வழியாக வந்த வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.பலியான வெங்கடேசனுக்கு சிந்து என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.
ஆரல்வாய்மொழி அருகே வாகனம் மோதியதில் டாஸ்மாக் விற்பனையாளர் பரிதாப சாவு
Published on

கன்னியாகுமரி :

குமரி மாவட்டம் ராஜாவூர் அருகே உள கோழிக்கொண்டு பொத்தை பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் வெங்டேசன் (வயது 46).

இவர், கிருஷ்ணன் கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு இவர் கடையை அடைத்ததும் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அவர் வீட்டுக்குச் செல்லாமல், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள உதயத்தூர் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டார். இதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். நேற்று இரவு முப்பந்தல் பேரிகார்டு அருகே வெங்கடேசன் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.

அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது என்பது பற்றி விசாரித்து வருகின்றனர். பலியான வெங்கடேசனுக்கு சிந்து என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com