குளச்சல் துறைமுகத்தில் மீன்வளத்துறை ஆணையர் ஆய்வு

சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் அமைக்க உத்தரவுதுறைமுகத்தில் அமைக்கப்பட்டு வரும் ஐஸ் பிளாண்டை பார்வையிட்டார்.
குளச்சல் துறைமுகத்தில் மீன்வளத்துறை ஆணையர் ஆய்வு
Published on

கன்னியாகுமரி:

தமிழக மீன் வளத்துறை ஆணையர் பழனிச்சாமி குளச்சல் மீன்பிடித்துறைமுகம் வந்து ஆய்வு மேற்கொண்டார்.

துறைமுகத்தில் அமைக் கப்பட்டு வரும் ஐஸ் பிளாண்டை பார்வையிட்ட அவர் இம்மாதம் இறுதியில் திறக்க ஆலோசனை வழங்கினார்.பின்னர் அவர் விசைப்படகு சங்க தலைவர் பிரான்சிஸ், துணைத்தலைவர் வர்கீஸ், செயலாளர் பிராங்கிளின், இணை செயலாளர் ஆன்றனிதாஸ், பொருளாளர் அந்திரியாஸ் ஆகியோருடன் ஆலோ சனை நடத்தினார்.

இதில் நாகர்கோவில் மீன்துறை துணை இயக்குனர் மோகன்ராஜ், குளச்சல் மீன்துறை துணை இயக்குனர் விர்ஜில் கிராஸ் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.அப்போது குளச்சல் மீன்பிடித்துறைமுக செயலாக்கம் குறித்து கேட்டறிந்தார்.பின்னர் அவர் துறைமுகத்தில் சுத்தமாக குடிநீர் கிடைக்க சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் அவர் தேங்காய்பட்டணம் துறைமுகம் சென்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com