அம்மாபேட்டையில் பிறந்த 13 நாளில் ஆண் குழந்தை திடீர் சாவு

கவியரசன் (வயது 25), கூலி வேலை செய்யும் இவருக்கு கல்பனா (23) என்ற மனைவி உள்ளார்.இந்த தம்பதிகளுக்கு 1 1/2 வயதில் பிரதீப் என்கிற மகன் உள்ளான். இந்த குழந்தை கடந்த சில நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்து வந்துள்ளது.
அம்மாபேட்டையில் பிறந்த 13 நாளில் ஆண் குழந்தை திடீர் சாவு
Published on

சேலம்:

சேலம் வாய்க்கால் பட்டறை ராமமூர்த்தி புதூர் பகுதி சேர்ந்தவர் கவியரசன் (வயது 25), கூலி வேலை செய்யும் இவருக்கு கல்பனா (23) என்ற மனைவி உள்ளார்.இந்த தம்பதிகளுக்கு 1 1/2 வயதில் பிரதீப் என்கிற மகன் உள்ளான்.இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமான கல்பனாவுக்கு கடந்த 6-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.இந்த குழந்தை கடந்த சில நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று குழந்தை திடீரென சோர்வாகி மயங்கவே உடனடியாக குழந்தை எடுத்துக்கொண்டு வந்து சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்த பிறகு தான் குழந்தை எவ்வாறு இருந்தது என்பது தெரிய வரும். குழந்தை திடீரென இறந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com