தீக்குளித்து வாலிபர் தற்கொலை

சித்தோடு அருகே தீக்குளித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சித்தோடு:

சித்தோடு அருகே  தீக்குளித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சித்தோடு அருகே உள்ள சாணார்பாளையம் ஆதிதிராவிடர்  வீதியை சேர்ந்தவர் கனகராஜ் (55). இவரது மனைவி வெண்ணிலா.  இவர் ஊத்துக்காடு அங்கன்வாடி மையத்தில் சமையல் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

இந்நிலையில் கனகராஜ் கடந்த சில காலமாக நோயால் அவதிப்பட்டு எந்த வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த கனகராஜ் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டின் அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு சென்று  தனக்கு தானே உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த சித்தோடு போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று உடல் கருகிய நிலையில் இருந்த கனகராஜ் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com