மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி-இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளி மாணவி சாதனை

மாணவி மிருதுளா ஜனனி 12 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் 3-வது இடம் பிடித்தார்.வெற்றி பெற்ற மாணவிக்கு வெற்றிக்கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது.
மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி-இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளி மாணவி சாதனை
Published on

தென்காசி:

தென்காசி மாவட்ட அளவிலான ஐ.பி.எல். சதுரங்க போட்டியானது பாவூர்சத்திரத்தில் உள்ள ஐ.பி.எல். சதுரங்க கலைக்கூடத்தில் நடைபெற்றது. இதில் இலஞ்சி பாரத் மாண்டி சோரி பள்ளியின் 6-ம் வகுப்பு மாணவி மிருதுளா ஜனனி 12 வயதுக்குட் பட்டோ ருக்கான பிரிவில் 3-வது இடம் பிடித்து சாதனை படைத்தார். போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிக்கு ஐ.பி.எல். சதுரங்க கலைக்கூடத்தின் சார்பாக பாராட்டுச் சான்றிதழும், வெற்றிக்கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது.

வெற்றி பெற்ற மாணவியை பாரத் கல்விக் குழுமத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகன கிருஷ்ணன், ஆலோசகர் உஷாரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளியின் முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் பாராட்டினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com