விழுப்புரம் அருகே புகையிலைப் பொருட்கள் விற்ற வாலிபர் கைது

விழுப்புரம் அருகே புகையிலைப் பொருட்கள் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப் -இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் ஆகியோர் செஞ்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் அருகே புகையிலைப் பொருட்கள் விற்ற வாலிபர் கைது
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட த்தில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிழைப் பொருட்களை கடைகளில் விற்பனை மற்றும் அதனை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. மீறி பயன்படுத்துவர் மீது போலீசாரால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தடை செய்ய ப்பட்ட புகையிலை பொருள்கள் பயன்படுத்து வதை தடுக்க விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப் -இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் ஆகியோர் செஞ்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது செஞ்சி தாலுகா வல்லம் பகுதியில் செல்வம் (வயது 30) என்பவர் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவரிடம் ரூ.20000 மதிப்பிலான ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. மேலும் இவர் பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்வதும் தெரியவந்தது. உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com