வடமதுரை அருகே இளம்பெண் தற்கொலை

உடல்நலக்குறைவு காரணமாக மனமுடைந்த பெண் அரளிவிதையை அரைத்துகுடித்து தற்கொலை செய்து கொண்டார்.வடமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

வடமதுரை:

வடமதுரை அருகில் உள்ள முடக்குபட்டியை சேர்ந்த மாணிக்கம் மனைவி பாக்கியலெட்சுமி(30).

இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் நோய்குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த பாக்கியலட்சுமி அரளிவிதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இவருக்கு வெங்கடேஷ்(12), கவின்(9), கீர்த்தனா(3) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். இதுகுறித்து வடமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com