திண்டுக்கல் அருகே ஆசிரியர் கண்டித்ததால் வி‌ஷம் குடித்த மாணவிகள்

திண்டுக்கல் அருகே ஆசிரியர் கண்டித்ததால் 2 மாணவிகள் வி‌ஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். #Suicidetry
திண்டுக்கல் அருகே ஆசிரியர் கண்டித்ததால் வி‌ஷம் குடித்த மாணவிகள்
Published on

கொடைரோடு:

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு டோல்கேட் அருகே கொழிஞ்சிப்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி நடுநிலைப்பள்ளியாக இருந்து நடப்பு கல்வி ஆண்டில்தான் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடந்தது. இத்தேர்வில் தமிழ்பாடத்தில் சில மாணவிகள் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தனர்.

பள்ளியின் 10-ம் வகுப்பு தமிழ் ஆசிரியர் மதிப்பெண் குறைவாக எடுத்த மாணவிகள் சிலரை கடுமையாக கண்டித்ததுடன் கன்னத்தில் அடித்துள்ளார்.

கொழிஞ்சிப்பட்டியைச் சேர்ந்த பழனி மகள் கவுசல்யாதேவி (வயது 15), கள்ளிப்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன் மகள் அங்காளஈஸ்வரி (15) ஆகிய 2 பேரும் ஆசிரியர் தங்களை வகுப்பறையில் சக மாணவிகள் மத்தியில் அடித்ததால் மனவேதனையடைந்தனர்.

நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு செல்லாமல் காட்டு பகுதியில் இருந்த அரளி விதையை அரைத்து சாப்பிட்டனர். பள்ளி முடிந்து நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராத தங்களது குழந்தைகளை தேடி பெற்றோர்கள் சென்ற போது மாணவிகள் 2 பேரும் சாலை ஓரத்தில் மயங்கிய நிலையில் இருந்தனர்.

உடனே அவர்களை கொடைரோடு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மாணவிகள் நடந்த விபரத்தை கூறவே இது குறித்து தலைமை ஆசிரியரிடம் புகார் அளிக்கப்பட்டது. மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தவே இது குறித்து விசாரணை நடத்த மாவட்ட கல்வி அதிகாரி கொழிஞ்சிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com