மதசார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்கள் 14-ந் தேதி வேட்பு மனு தாக்கல்: தேவகவுடா

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலையொட்டி ஜனதா தளம் (எஸ்) கட்சியின் வேட்பாளர்கள் வருகிற 14-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என்று தேவகவுடா கூறியுள்ளார்.
தேவகவுடா
தேவகவுடா
Published on

பெங்களூரு :

முன்னாள் பிரதமர் தேவகவுடா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலையொட்டி ஜனதா தளம் (எஸ்) கட்சியின் வேட்பாளர்கள் வருகிற 14-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வார்கள். சிரா தொகுதி வேட்பாளரை நாங்கள் ஏற்கனவே அறிவித்துவிட்டோம். ராஜராஜேஸ்வரிநகர் தொகுதிக்கு 3 பேரின் பெயர்களை நாங்கள் இறுதி செய்துள்ளோம். அதில் ஒருவரை வேட்பாளராக அறிவிப்போம். எங்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதில் வேட்பாளரின் பெயரை இறுதி செய்வோம். இந்த இடைத்தேர்தலில் எங்கள் கட்சியை வெற்றி பெற வைக்க நாங்கள் தீவிரமாக உழைப்போம்.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com