ஊத்துக்கோட்டையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை: குளிர்பான குடோன் உரிமையாளருக்கு ரூ.2 லட்சம் அபராதம்

ஊத்துக்கோட்டையில் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த கிடங்கு உரிமையாளருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஊத்துக்கோட்டையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை: குளிர்பான குடோன் உரிமையாளருக்கு ரூ.2 லட்சம் அபராதம்
Published on

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டி.ஆர்.ஓ. முத்து நேற்று ஊத்துக் கோட்டையில் பேரூராட்சி நிர்வாகம் நடத்தும் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டார்.

கோட்டை பகுதியில் தயாளன் என்பவருக்கு சொந்தமான குளிர்பான கிடங்கில் திடீர் சோதனை மேற்கொண்டார். அப்போது குவியலாக இருந்த உடைந்த பாட்டில்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள், தேங்கி நின்ற மழை நீர், குப்பை கிடங்கை பார்த்தார்.

உடனே அவர் தாசில்தார் கிருபாஉஷா, துணை தாசில்தார் கதிர்வேல், பேரூராட்சி செயல் அலுவலர் தன்ராஜ் ஆகியோரை அழைத்து டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த கிடங்கு உரிமையாளருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com