சத்துவாச்சாரி, கொணவட்டத்தில் வீடு, வீடாக டெங்கு ஒழிப்பு பணிகள் ஆய்வு

வேலூர் மாநகராட்சி பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடக்கிறது. கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அதிகாரிகள் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
சத்துவாச்சாரி, கொணவட்டத்தில் வீடு, வீடாக டெங்கு ஒழிப்பு பணிகள் ஆய்வு
Published on

வேலூர்:

வேலூர் நேதாஜி மைதானம் அருகே உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார். மாநகராட்சி என்ஜினியர் பாலசுப்பிரமணியன், மாநகராட்சி நல அலுவலர் மணிவண்ணன், சுகாதார அலுவலர் முருகன் ஆகியோர் உடனிருந்தனர். கொணவட்டத்தில் இன்று காலை பயிற்சி கலெக்டர் ஸ்ரீ காந்த் வீடு வீடாக சென்று கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

முத்துமண்டபம் பகுதியில் சுகாதார அலுவலர் முருகன் ஆய்வு செய்தபோது அங்கு பழைய பேட்டரி விற்பனை கடையில் கொசு ஒழிப்பு புழுக்கள் இருந்தது. அந்த கடையின் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கபட்டது.

சத்துவாச்சாரி பெரிய தெருவில் மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன் வீடு வீடாக சென்று ஆய்வு செய்தார். உதவி கமி‌ஷனர் வெங்கடேசன், சுகாதார அலுவலர் சிவக்குமார் உடனிருந்தனர்.

வீடுகளில் கொசு உற்பத்தி இல்லாததால் அபராதம் விதிக்கபடவில்லை.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com