ரூ.2 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி கைது

2 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவரை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பஷீர் அகமது
கைது செய்யப்பட்ட பஷீர் அகமது
Published on

புதுடெல்லி:

ஜம்மு காஷ்மீரின் சோபூர் பகுதியைச் சேர்ந்தவ் பஷீர் அகமது பொன்னு. ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் இவர் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் 2007ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2013ல் அவரை விடுவித்தது. பின்னர் 2014ம் ஆண்டு அவரை குற்றவாளி என டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்தது. 

தலைமறைவான அவரை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் கடந்த 4 ஆண்டுகளாக தேடி வந்தனர். அவரைப் பற்றி துப்பு கொடுத்தால் 2 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பஷீர் அகமது பொன்னு, ஸ்ரீநகரில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் இன்று அதிகாலையில் ஸ்ரீநகர் சென்று அவரை கைது செய்தனர். அங்கிருந்து டெல்லிக்கு அழைத்து வர உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com