பணியிடத்தில் பாலியல் தொல்லை- டெல்லியில் பெண் டாக்டர் தற்கொலை

டெல்லியில் பெண் டாக்டர் ஒருவர், சக டாக்டர்களின் பாலியல் தொந்தரவு காரணமாக தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #WomanDoctorSuicide #HarassedAtWork
பணியிடத்தில் பாலியல் தொல்லை- டெல்லியில் பெண் டாக்டர் தற்கொலை
Published on

டெல்லியில் உள்ள பிரபல மருத்துவமனையான ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் கதிரியக்கவியல் டாக்டராக  பணியாற்றியவர் டாக்டர் பூனம் வோரா (வயது 52). இவர் பாபா காரக் சிங் மார்க் பகுதியில் உள்ள மத்திய அரசு ஊழியர் குடியிருப்பில் வசித்து வந்தார்.

இந்நிலையில் டாக்டர் பூனம் வோரா நேற்று தனது வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு, மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மேலும், தற்கொலை செய்வதற்கு முன்பு, டாக்டர் பூனம் வோரா எழுதிய கடிதமும் கிடைத்தது. அதில், தன்னுடன் பணியாற்றிய 3 டாக்டர்கள் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக குறிப்பிட்டுள்ளார். அந்த டாக்டர்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com