அவதூறு வழக்கு: நடிகர் எஸ்.வி.சேகர் நேரில் ஆஜராக நெல்லை கோர்ட்டு உத்தரவு

நடிகர் எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் ஜூன் 18ந்தேதி நெல்லை கோர்ட்டில் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். #Defamationcase #svShekher
அவதூறு வழக்கு: நடிகர் எஸ்.வி.சேகர் நேரில் ஆஜராக நெல்லை கோர்ட்டு உத்தரவு
Published on

நெல்லை:

நடிகர் எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசியது தொடர்பாக சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் எஸ்.வி.சேகர் மீது நெல்லையை சேர்ந்த பத்திரிகையாளர் கோபால்சாமி சார்பில், நெல்லை கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு நெல்லை முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், மாஜிஸ்திரேட்டு ராமதாஸ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாஜிஸ்திரேட்டு ராமதாஸ் இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜூன் மாதம் 18-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார். அன்றைய தினம் எஸ்.வி.சேகர் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், அதற்கு அவருக்கு சம்மன் அனுப்பவும் உத்தரவிட்டார். #TamilNews #Defamationcase #svShekher 

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com