5.5 லட்சம் தீபங்களுடன் அயோத்தியில் தீப உற்சவம் - புதிய உலக சாதனை

அயோத்தியில் தீபாவளியையொட்டி 5.5 லட்சத்துக்கும் அதிகமான அகல் விளக்குகளை ஏற்றி நடைபெற்றுவரும் தீப உற்சவம் நிகழ்ச்சி புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.
அயோத்தியில் நடைபெற்றுவரும் தீப உற்சவம்
அயோத்தியில் நடைபெற்றுவரும் தீப உற்சவம்
Published on

லக்னோ:

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ளது. தீபாவளியை முன்னிட்டு உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் தீப உற்சவம் இன்று முதல் நான்கு நாட்கள் நடைபெற்ற உள்ளது.

இந்நிலையில், தீப உற்சவ நிகழ்ச்சியின் முக்கிய பகுதியாக அயோத்தி நகரின் சரயு நதியின் கரையோரத்தில் ஐந்தரை லட்சம் அகல் விளக்குகளை ஏற்றி கொண்டாடி வருகின்றனர். இதனால் அயோத்தி முழுவதும் தீப ஒளி வெள்ளத்தில் ஜொலித்து வருகிறது.

கடந்த ஆண்டு தீபாவளியின் போது சுமார் மூன்று லட்சம் அகல் விளக்குகளை ஏற்றியது கின்னஸ் சாதனை படைத்த நிலையில், இந்த ஆண்டு ஐந்தரை லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி ஒளிரவிடப்பட்டுள்ளது புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

அயோத்தியில் நடைபெற்றுவரும் தீப உற்சவ நிகழ்ச்சியில் அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com