ராதாபுரத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

ராதாபுரம் வட்டார அரசு மருத்துவமனை சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் ராதாபுரத்தில் நடந்தது.
தடுப்பூசி முகாம்
தடுப்பூசி முகாம்
Published on

விக்கிரவாண்டி:

விழுப்புரம் மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம் ராதாபுரம் வட்டார அரசு மருத்துவமனை சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் ராதாபுரத்தில் நடந்தது. முகாமை வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகோபாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் வினோத் தலைமையில் டாக்டர் அர்ச்சனா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள் பாபு, ரமணி, பாலாஜி, செவிலியர்கள் முத்துராமலிங்கம், சுபாஷினி, லேப் டெக்னிஷியன் ஆபேல்ராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் 150-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர். ஊராட்சி ஒன்றிய துப்புரவு பணியாளர்கள் கிராம தெருக்களில் கிருமிநாசினி தெளித்ததோடு, துப்புரவு பணியில் ஈடுபட்டனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com