திருப்பத்தூரில் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பண்ணை எந்திரம், டிராக்டர்கள்

திருப்பத்தூரில் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பண்ணை எந்திரம், டிராக்டர்களை கலெக்டர் சிவன்அருள் வழங்கினார்.
கலெக்டர் சிவன்அருள் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பண்ணை எந்திரங்கள், டிராக்டர்களை வழங்கினார்
கலெக்டர் சிவன்அருள் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பண்ணை எந்திரங்கள், டிராக்டர்களை வழங்கினார்
Published on

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் வட்டார கூட்டு பண்ணையம் திட்டத்தின்கீழ் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு பண்ணை எந்திரங்கள், ரூ.27 லட்சம் மதிப்பிலான 4 டிராக்டர்கள் மானிய விலையில் வழங்கும் விழா நடந்தது.

மாவட்ட கலெக்டர் சிவன்அருள் தலைமை தாங்கி, உற்பத்தியாளர் குழுக்களுக்கு பண்ணை எந்திரங்கள், டிராக்டர்களை வழங்கினார்.

இதில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் மகேந்திர பிரதாப் தீக்‌ஷித், வேளாண்ணை துணை இயக்குனர் பாலா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஸ்வநாதன், வேளாண்மை உதவி இயக்குனர் ராகினி, வேளாண் அலுவலர் ஸ்வஸ்திகா, துணை வேளாண்மை அலுவலர் ராஜ்குமார், வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரவீன்குமார் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

விழாவில், விவசாயிகள் ஒன்று சேர்ந்து பயிர் சாகுபடி மேற்கொண்டு பயனடைய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com