கோவை ஜல்லிக்கட்டு: ஈஷா நிறுவனர் சத்குரு சிறப்பு விருந்தினராக பங்கேற்பு

கோவை மாவட்டம் செட்டிப்பாளையத்தில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் ஈஷா நிறுவனர் சத்குரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
ஈஷா சத்குருவை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற அமைச்சர் எஸ்.பி. வேலுமணி
ஈஷா சத்குருவை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற அமைச்சர் எஸ்.பி. வேலுமணி
Published on

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நம் தமிழ்நாட்டின் பெருமை ஜல்லிக்கட்டு. தமிழ் இளைஞர்களின் இயல்பான வீரம்,சவாலை எதிர்கொள்ளும் தீரத்தின் அற்புதமான வெளிப்பாடு.

தனித்துவமான இது சரியான விதிமுறைகள் வகுக்கப்பட்டு, காளைகள் மற்றும் அனைவரின் பாதுகாப்பை உள்ளடக்கி பிரமாதமான விளையாட்டாக வளர்க்கப்பட வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தபோது, அந்த தடையை நீக்க வலியுறுத்தி தேசிய ஊடகங்களில் தமிழ் கலாச்சாரத்துக்கு ஆதரவாக சத்குரு பேசியது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியை ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி இதில் கலந்து கொண்டார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com