

திருவொற்றியூர்:
சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகத்தில் சரக்குகளை ஏற்றிச்செல்லும் டிரெய்லர், டாரஸ் லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர், கிளனர் தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ராயபுரத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில், 2014-ல் அறிவித்தபடி 20 சதவீதம் வாடகை உயர்த்தி வழங்க வேண்டும், 15 நாட்களுக்குள் பில் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 19-ந்தேதி காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.