மயானத்திற்கு செல்ல பாதை வசதி இல்லாததால் வயல் வரப்பில் நடந்து செல்லும் அவலம்

கடத்தூர் அருகே மயானத்திற்கு செல்ல பாதை வசதி இல்லாததால் வசதி ஏற்படுத்தி தர கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயானத்திற்கு செல்ல பாதை வசதி இல்லாததால் வயல் வரப்பில் நடந்து செல்லும் மக்கள்.
மயானத்திற்கு செல்ல பாதை வசதி இல்லாததால் வயல் வரப்பில் நடந்து செல்லும் மக்கள்.
Published on

கடத்தூர்:

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கடத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 13-வது மற்றும் 14-வது வார்டு புதுரெட்டியூர் பகுதியில் 450-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ளவர்கள் யாரேனும் இறந்தால் அவர்களை அடக்கம் செய்யவும், தகனம் செய்யவும் அப்பகுதி மயானத்திற்கு எடுத்துச் செல்வர். 

இந்த நிலையில் மயானத்திற்குசெல்ல போதிய பாதைவசதி இல்லாத நிலையில் உள்ளது. விவசாய நிலங்களில் வரப்புகளில் நடந்து சென்றவாறு இறந்தவர்களின் பிரேதத்தை கொண்டுசெல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இறந்தவர்களை தோளில் சுமந்தவாறு வரப்புகளில் செல்கின்றனர். மயானத்திற்கு செல்ல போதிய இடவசதி இல்லாதது குறித்து பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்த பயனும் இல்லாதநிலை நேர்ந்துள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் மயானத்திற்கு சென்று வர பாதை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com