போலீஸ் பக்ரூதீன் தங்கிய அறை அருகில் செல்போன் பறிமுதல்

புழல் ஜெயிலில் உயர் பாதுகாப்பில் உள்ள தீவிரவாதி போலீஸ் பக்ரூதீன் தங்கிய அறை அருகில் செல்போனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் பக்ரூதீன்
போலீஸ் பக்ரூதீன்
Published on

செங்குன்றம்:

புழல் ஜெயிலில் போலீஸ் பக்ரூதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் உள்ளிட்ட 5 தீவிரவாதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் போலீஸ் பக்ரூதீன் உயர் பாதுகாப்பு கொண்ட தனி அறையில் உள்ளார். நேற்று முன்தினம் இரவு ஜெயில் சூப்பிரண்டு செந்தாமரை கண்ணன் தலைமையில் 10 போலீசார் பக்ரூதீன் அறை அருகில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குள்ள ஒரு மரம் அருகில் ஏதோ ஒன்று மண்ணில் புதைக்கப்பட்ட அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் அந்த இடத்தில் ஆய்வு செய்தனர். மண்ணை தோண்டி வெளியே எடுத்தனர். மண்ணுக்கு அடியில் ஒரு காலி பாட்டில் இருந்தது. அதில் ஒரு செல்போன், ஹெட்போன், பேட்டரி, சார்ஜர் ஆகியவை இருந்தன. அவற்றை கைப்பற்றிய போலீசார் அது அங்கு எப்படி வந்தது? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் பக்ரூதீனுக்காக ஜெயிலுக்குள் கொண்டு வரப்பட்டதா? அல்லது வேறு யாருக்காகவும் பதுக்கி வைக்கப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

அந்த செல்போனில் பேசியது யார், வெளியில் இருந்து வந்த எண்களை ஆய்வு செய்து ஜெயிலுக்குள் அவருக்கு யாருடன் தொடர்பு என விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com