செல்போன் கைப்பற்றிய வழக்கு: வேலூர் கோர்ட்டில் முருகன் ஆஜர்

செல்போன் கைப்பற்றிய வழக்கில், வேலூர் கோர்ட்டில் முருகன் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு விசாரணை அடுத்த மாதம் 9-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
செல்போன் கைப்பற்றிய வழக்கு: வேலூர் கோர்ட்டில் முருகன் ஆஜர்
Published on

வேலூர்:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான முருகன், வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி நளினி, வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சமீபத்தில் முருகன் அடைக்கப்பட்டுள்ள சிறை அறையில் செல்போன் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக, அவர் மீது வழக்கு பதியப்பட்டு, வேலூர் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.

வழக்கு விசாரணைக்காக, முருகன் ஜெயிலில் இருந்து வேலூர் கோர்ட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று அழைத்துவரப்பட்டு ஜூடிசியல் மாஜிஸ்திரேட் 1-ல் நீதிபதி அலிசியா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

பிறகு, வழக்கு விசாரணை அடுத்த மாதம் 9-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, முருகன் மீண்டும் வேலூர் ஜெயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com