காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மே 17 இயக்கத்தினர் மதுரையில் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மே 17 இயக்கத்தினர் மதுரையில் போராட்டம் நடத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மே 17 இயக்கத்தினர் மதுரையில் போராட்டம்
Published on

மதுரை:

காவிரி நீர் பிரச்சினையில் மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இது தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசியல் கட்சிகள் போராட்ட களத்தில் குதித்துள்ளன. காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தி வருகிற 5-ந் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மே 17 இயக்கத்தினர் மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி சந்திப்பில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு இயக்க ஒருங்கிணைப்பாளர் மகாமுனி தலைமை தாங்கினார். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினார்கள்.

அதனை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் கைகளில் ஏந்தியபடி நின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து மே 17 இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com