

ஈரான் போர் ஓய்ந்து ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டு மத்திய கிழக்கில் இருந்து கச்சா எண்ணெய் வரத்து அதிகரித்த ஒரு சில நாட்களில் மீண்டும் போர் மூண்டுள்ளதால் சர்வதேச கச்சா எண்ணெய் விலைகளில் மீண்டும் தாக்கம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் பெட்ரோல், டீசல் கிடைக்கிறது. அந்த வகையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொருத்தும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை வைத்தும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.
அந்த வகையில் இன்றைய (11.07.2026 - சனிக்கிழமை) பெட்ரோல், டீசல் விலைப்பட்டியல் வெளியாகி உள்ளது.
இதன்படி, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.76-க்கும் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.97 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.