இங்கிலாந்தில் சிறுமிகளை மயக்கி 5 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம்: 2 தமிழர்களுக்கு ஜெயில்

இங்கிலாந்தில் சிறுமிகளிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி 5 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களை பலாத்காரம் செய்த 2 தமிழர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் சிறுமிகளை மயக்கி 5 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம்: 2 தமிழர்களுக்கு ஜெயில்
Published on

இங்கிலாந்தில் உள்ள வல்லசி நகரை சேர்ந்த இளவரசன் (26) என்பவரும் விகன் நகரை சேர்ந்த வினோதன் ராஜேந்திரம் (27) என்பவரும் சகோதரர்கள் ஆவர். தமிழர்களான இருவரும் கடந்த 2010 முதல் 2016-ம் ஆண்டு வரை வால்டன் மற்றும் கார்ஸ்டன் நகரங்களில் உள்ள வணிக மையங்களில் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இந்த காலக்கட்டத்தில் இவர்களது கடைகளுக்கு வந்த சிறுமிகளிடம் அன்பாகவும், பாசமாகவும் இருப்பது போல் நடித்து உள்ளனர். சிறுமிகளுக்கு இலவசமாக இனிப்புகள், அவர்களது செல்போன்களுக்கு இலவசமாக ரீ-சார்ஜ் செய்வது உள்ளிட்ட உதவிகளை செய்து அவர்களை கவர்ந்து உள்ளனர்.

சகோதர்கள் மீது நம்பிக்கை கொண்ட 9 சிறுமிகள் அவர்களது கடைகளுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர். சிறுமிகளுடன் இருவரும் அடிக்கடி வெளியே சென்று பொழுதை கழித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், 14 மற்றும் 15 வயதுடைய சிறுமிகளை சகோதரர்கள் இருவரும் காரில் அழைத்துச் சென்றுள்ளனர். ஆட்கள் நடமாட்டம் இல்லாத குடியிருப்பு ஒன்றிற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு மதுவை ஊற்றி கொடுத்து ஆசை வார்த்தைகள் பேசி அவர்களுடன் உறவு வைத்துள்ளனர். இவ்வாறு சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுமிகளை இந்த சகோதரர்கள் பலாத்காரம் செய்துள்ளனர்.

இவ்விவகாரம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில், இருவரையும் போலீசார் கைது செய்து லிவர்பூல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நேற்று முடிவடைந்த நிலையில், சகோதரர்களின் குற்றம் நிரூபணமானது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com