பூதலூர் அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது

பூதலூர் அருகே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சாராயம் காய்ச்சிய 2 பேரை கைது செய்தனர்.
கைது
கைது
Published on

பூதலூர்:

பூதலூர் அருகே உள்ள மாரநேரி செல்லும் வழியில் உள்ள ஆனந்தகாவிரி வடிகால் பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக பூதலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். ஆனந்தகாவிரி வடிகால் பகுதியில் உள்ள புதரில் ரகசியமாக சாராயம் காய்ச்சியதை கண்டு பிடித்தனர். இதுகுறித்து இன்ஸ் பெக்டர் முருகேசன் வழக்குபதிவு செய்து பெரியகாங்கேயன்பட்டியை சேர்ந்த மகாமுனி (வயது48), முருகேசன்(33) ஆகிய 2 பேரையும் கைது செய்தார். 

தப்பி ஓடிய பெரியகாங்கேயன்பட்டி தனபால்(30),வெள்ளெலி(30) ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com