திருமணத்துக்கு வற்புறுத்திய காதலி மீது தாக்குதல் - காதலன் கைது

ஊத்துக்கோட்டை அருகே திருமணத்துக்கு வற்புறுத்திய காதலியை தாக்கிய காதலனை போலீசார் கைது செய்தனர்.
திருமணத்துக்கு வற்புறுத்திய காதலி மீது தாக்குதல் -  காதலன் கைது
Published on

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள புல்லரம்பாக்கம் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் அருணகிரி. இவரது மகன் சக்திவேல் (25) என்கின்ற இமானு.

சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் பூண்டி அருகே உள்ள நெய்வேலி கிராமத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணை 3 ஆண்டுகளாக காதலித்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இமானு, காதலியை சந்திப்பது தவிர்த்து வந்தார். இமானுக்கு அவரது பெற்றோர்கள் வேறு ஒரு பெண்ணுடன் திருமணத்துக்கு ஏற்பாடுகள் செய்ததாக தெரிகிறது.

இதனை அறிந்த இளம்பெண், காதலன் இமான் வீட்டுக்கு சென்ற தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்தினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த இமானு, அவரது தம்பி இன்பரசன் ஆகியோர் சேர்ந்து இளம்பெண்ணை தாக்கினர். இதுகுறித்து ஊத்துக்கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அனுராதா வழக்கு பதிவு செய்து இமானு, இன்பரசன் ஆகியோரை கைது செய்தார்.

பின்னர் அவர்கள் ஊத்துக்கோட்டை கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருவள்ளூர் கிளை ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com